அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், நடைபெற்று வரும் FIFA உலகக் கிண்ணம் 2026 தொடரின் இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கமைய, இந்த வாரம் Trump Tower-இல் நடைபெறும் FIFA வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் உலகக் கிண்ண இறுதிப் போட்டியை நேரில் பார்வையிட ஜனாதிபதி டிரம்ப் செல்லவுள்ளார்.
நடப்பு உலகக் கிண்ணத் தொடரில், ஜனாதிபதி டிரம்ப் நேரில் பார்வையிடும் முதல் மற்றும் ஒரே போட்டி இதுவாகும் எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.





