ஈரான்: ஜோர்டானில் அமெரிக்க போர் விமானங்கள் மற்றும் குவைத்தில் பல இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக அறிவிப்பு

ஈரானின் புரட்சிகர காவற்படை (IRGC), ஜோர்டானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க போர் விமானங்களைத் தாக்கியுள்ளதாக ஈரான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், ஜோர்டானின் அஸ்ராக் (Azraq) இராணுவத் தளத்தில் அமைந்திருந்த அமெரிக்க இராணுவ தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் எரிபொருள் சேமிப்பு வசதிகளும் தாக்கப்பட்டதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.

எனினும், ஜோர்டான் இராணுவம், தங்கள் நாட்டை நோக்கி ஏவப்பட்ட மூன்று ஈரானிய ஏவுகணைகள் இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவித்துள்ளது.

மேலும், குவைத்தில் அமெரிக்க படையினரும் இஸ்ரேல் ஆதரவு போராளிகளும் தங்கியிருந்ததாகக் கூறப்படும் பல இடங்களில் தாக்குதல் நடத்தி, HIMARS ஏவுகணை அமைப்புகள் மற்றும் ஏவுகணைகளை அழித்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்களில் அமெரிக்க விசேட படையினர் மற்றும் “எதிர்ப்புரட்சியாளர்கள்” பலர் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ள ஈரான் புரட்சிகர காவற்படை, பதிலடி தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore