முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ரோஷன் மகாநாம, 2026 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் Dambulla Sixers அணியின் வழிகாட்டியாக (Mentor) செயல்படுவதோடு, இலங்கை கிரிக்கெட்டை நிர்வகிக்கும் Cricket Transformation Committee உறுப்பினராகவும் இருப்பது தொடர்பாக எழுந்த நலன் முரண்பாடு (Conflict of Interest) குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் பேசிய அவர், Transformation Committee உறுப்பினராக தனது நியமனம் தற்காலிகமானது என்றும், அது தேர்தல் அல்லது நிரந்தர நியமனம் அல்ல என்றும் தெரிவித்தார்.
மேலும், விளையாட்டுத்துறை அமைச்சரிடமிருந்து நியமனக் கடிதம் கிடைத்தபோது, தாம் ஏற்கனவே Dambulla Sixers, Pakistan Super League (PSL) மற்றும் ILT20 போட்டிகளில் Mentor மற்றும் Freelance Match Referee ஆக பணியாற்றி வருவதை எழுத்து மூலம் அமைச்சருக்கு அறிவித்திருந்ததாகவும் கூறினார்.
அத்துடன், Dambulla Sixers அணியுடனான தனது பணிகள் 2024 ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டவை என்பதால், தற்போது எழுப்பப்படும் நலன் முரண்பாடு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை இல்லை என்றும் ரோஷன் மகாநாம வலியுறுத்தினார்.





