இலங்கையின் முன்னணி ஆடை விற்பனை நிறுவனமான House of Fashions நிறுவனத்தின் உரிமையாளர் பிரீதி ஜயவர்தன, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் விசாரணையின் போது ஏற்பட்ட இதய நோய் தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா, சுங்க அதிகாரிகளின் விசாரணையின் போது பிரீதி ஜயவர்தனவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் உடனடியாக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, கொழும்பு பிரதம நீதவான் வைத்தியசாலைக்குச் சென்று சந்தேகநபரின் நிலையை நேரில் பார்வையிட்டதன் பின்னர், அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த விசாரணை, சுங்கப் பொருட்களின் மதிப்பீடு (Customs Valuation) தொடர்பான விடயத்தை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படுவதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.





