ரொனால்டோவின் கணிப்பு: உலகக் கிண்ண இறுதியில் ஸ்பெயின் வெற்றி பெறும்

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ நஸாரியோ, 2026 FIFA உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் வெற்றி பெறும் என கணித்துள்ளார்.

ESPN Brasil ஊடகத்திடம் கருத்து தெரிவித்த ரொனால்டோ, போட்டி முழுவதும் பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திறன் காரணமாக ஸ்பெயின் கிண்ணத்தை வெல்லும் அணியாக இருப்பதாக தெரிவித்தார்.

“ஸ்பெயின் வெற்றி பெறும் என நினைக்கிறேன் – அதுவும் இலகுவாக” என அவர் கூறியுள்ளார்.

மேலும், ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகளை போட்டிக்கு முன்பே தாம் முன்னணி அணிகளாக கருதியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்பெயின் ஒன்று அல்லது இரண்டு கோல்கள் முன்னிலை பெற்றால், அதனை மாற்றி வெற்றி பெறும் வலிமை அர்ஜென்டினாவுக்கு இருக்காது எனவும் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

2026 FIFA உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகள் ஞாயிற்றுக்கிழமை நியூயோர்க்கில் மோதுகின்றன. இலங்கை நேரப்படி போட்டி திங்கட்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு ஆரம்பமாகும்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore