சமூக ஊடகங்களில் பரவி வரும் தம்பதிவா மற்றும் தாய்லாந்து மத யாத்திரைகளுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக கூறப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என தொழிலாளர் அமைச்சு தெரிவித்துள்ளது.
தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான டாக்டர் அனில் ஜயந்த பிரனாந்து இவ்வாறான எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
அரசியல் நோக்கத்துடன் சமூக, அரசியல் மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இத்தகைய போலி தகவல்கள் பரப்பப்படுவதாகவும், அவற்றை அமைச்சு கடுமையாகக் கண்டிப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





