தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அவசர உதவி குழுவுக்கு ஹர்ஷா டி சில்வா பாராட்டு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா, தனது வாகனம் தொடர்பான சம்பவத்தின் போது விரைவாக உதவிய தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 1969 அவசர வீதி உதவி குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

தனது ‘X’ சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்ட அவர், நேற்று மாலை தானும் தனது மனைவியும் அச்சுறுத்தலான சூழ்நிலையை எதிர்கொண்டதாகவும், ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் பின்னர் அவசர உதவி குழுவினர் சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்து உதவியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் மிகுந்த தொழில்முறை அணுகுமுறையுடனும் மரியாதையுடனும் செயற்பட்டதாகவும், வழக்கமான பொறுப்பில் இல்லாதிருந்த போதிலும் வாகனத்தின் டயரை மாற்றுவதற்கும் உதவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வாகன ஓட்டிகள் தங்களது டயர்களை முறையாக பரிசோதித்து கொள்ள வேண்டும் எனவும், மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்த போது சம்பவம் வாகனத்தின் பின்புறத்தில் இடம்பெற்றது அதிர்ஷ்டம் எனவும் ஹர்ஷா டி சில்வா கூறியுள்ளார். (Newswire)

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore