மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற சிறுவன் மாயம்

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவனொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்.

மூன்று சிறுவர்கள் இணைந்து ஆற்றில் நீராட சென்ற போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

ஏனைய 2 சிறுவர்களும் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாகக் மீட்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய காணாமல்போன சிறுவனைத் தேடும் பணிகளில், பிரதேசவாசிகளும் கம்பளை பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

-கண்டி நிருபர் ராஜ்-

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore