காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் 58 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் திருமணமாகாதவர் என்பதுடன், குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, அருகிலுள்ள வீட்டில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் கராப்பிட்டிய பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது, குளியலறையில் இருந்து குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக காலி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கராப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





