மார்வெல் மற்றும் சோனி தயாரிப்பில் வெளியான ‘Spider-Man: Brand New Day’ திரைப்படம், வெளியான முதல் வார இறுதியிலேயே அமெரிக்காவில் 360 மில்லியன் அமெரிக்க டொலர் வசூலித்து, இதுவரை ‘Avengers: Endgame’ படத்தின் பெயரில் இருந்த அதிகபட்ச தொடக்க வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு வெளியான ‘Avengers: Endgame’ திரைப்படம் முதல் வார இறுதியில் 357 மில்லியன் டொலர் வசூலித்திருந்த நிலையில், ‘Brand New Day’ அதனை விஞ்சி புதிய சாதனையைப் படைத்துள்ளது.
உலகளாவிய ரீதியில், இப்படம் வெளியான முதல் மூன்று நாட்களிலேயே 932 மில்லியன் அமெரிக்க டொலர் வசூலித்துள்ளதுடன், உலக சினிமா வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய தொடக்க வசூலைப் பதிவு செய்த திரைப்படமாக மாறியுள்ளது.
டோம் ஹாலண்ட் மீண்டும் ஸ்பைடர்-மேன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம், உலகளவில் 2 பில்லியன் அமெரிக்க டொலர் வசூலை எளிதில் கடக்கும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.





