இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோர் கொழும்பு உயர் நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இரு சந்தேகநபர்களும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
இதன்போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சமர்ப்பிப்புகளை பரிசீலித்த நீதவான், குறித்த இருவரும் உயர் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.





