2030ஆம் ஆண்டுக்குள் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை (Expressway) வலையமைப்பை மேலும் 132 கிலோமீட்டர் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக நான்கு முக்கிய திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
தற்போது கட்டுமானத்தில் உள்ளவை:
🔹 மத்திய அதிவேக நெடுஞ்சாலை – கட்டம் 1
➡️ கடவத்தை – மீரிகம பகுதி
➡️ நீளம்: 37 கி.மீ.
🔹 மத்திய அதிவேக நெடுஞ்சாலை – கட்டம் 3
➡️ பொத்துஹெர – கலகெதர பகுதி
➡️ நீளம்: 33 கி.மீ.
மேலும்,
🔹 குருநாகல் – தம்புள்ள அதிவேக நெடுஞ்சாலை திட்டம்
➡️ முதல் கட்டமாக குருநாகல் – கலேவெல பகுதி
➡️ நீளம்: 38 கி.மீ.
➡️ மதிப்பீட்டு செலவு: ரூ. 233 பில்லியன்
இந்தத் திட்டம் 12 தொகுதிகளாக பிரிக்கப்பட்டு, வெளிப்படையான டெண்டர் முறையின் மூலம் உள்நாட்டு கட்டுமான நிறுவனங்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளது.
🔹 ருவன்புர அதிவேக நெடுஞ்சாலை திட்டம்
➡️ நீளம்: 24 கி.மீ.
➡️ இந்த ஆண்டிலேயே ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அமைச்சின் தகவலின்படி, இந்த அதிவேக நெடுஞ்சாலை திட்டங்கள் முழுமையாக உள்நாட்டு அரச நிதியை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் முதல் திட்டங்களாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





