இலங்கை மத்திய வங்கி (CBSL) ஏற்பாடு செய்யும் இரண்டு நாள் டிஜிட்டல் கொடுப்பனவு ஊக்குவிப்பு நிகழ்ச்சி எதிர்வரும் ஆகஸ்ட் 7 மற்றும் 8, 2026 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
📍 இடம்: Cargills Square, யாழ்ப்பாணம்
⏰ நேரம்: காலை 8.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை
“Shaping the future through digital payments” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, அரச அதிகாரிகள், வர்த்தக சமூகத்தினர் மற்றும் பொதுமக்களிடையே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைகள் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த தேசிய வேலைத்திட்டம் நிதி நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படுகிறது.
இதற்கு முன்னர்: 🔹 ஹம்பாந்தோட்டை
🔹 நுவரெலியா
🔹 தம்புள்ள
🔹 குருநாகல்
🔹 திருகோணமலை
ஆகிய பகுதிகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண நிகழ்வில்:
✅ வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் e-money சேவை வழங்குநர்கள் மூலம் தனிப்பட்ட உதவிகள் வழங்கப்படும்.
✅ பொதுமக்கள் டிஜிட்டல் கொடுப்பனவு சேவைகளை பதிவு செய்து பயன்படுத்தும் முறைகள் கற்றுக்கொள்ள முடியும்.
✅ வணிக நிறுவனங்களுக்கு LANKAQR கட்டண வசதியை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளதுடன், CBSL அதிகாரிகள், மாவட்ட செயலாளர், வங்கிகள் மற்றும் LankaPay பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.





