பயிற்சி வகுப்பு பணத்தில் சாராயம் வாங்கிய இளைஞர்: பந்தரவளையில் வைரலான காணொளி

பந்தரவளையில் இன்று காலை 8.00 மணியளவில், மதுபான விற்பனை நிலையத்தில் (Wine Store) இருந்து சாராயப் போத்தலுடன் வெளியே வந்த 19 வயது இளைஞரை பொதுமகன் ஒருவர் தடுத்து விசாரிக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

பாடசாலைப் பையை சுமந்தபடி வெளியே வந்த இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பயிற்சி வகுப்பிற்காக (Tuition) வழங்கப்பட்ட பணத்தை பயன்படுத்தி ரூ.3,100 பெறுமதியான சாராயப் போத்தலை வாங்கியிருப்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, பொதுமகன் மதுபான விற்பனை நிலைய ஊழியர்களிடமும் கேள்வி எழுப்பி, குறித்த இளைஞருக்கு விற்பனை செய்யப்பட்ட சாராயப் போத்தலை மீளப் பெற்றுக்கொண்டு, அதற்கான பணத்தை திருப்பி வழங்குமாறும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore