சாலை பாதுகாப்பு அலட்சியம் குற்றச்சாட்டு – பள்ளத்தில் விழுந்து கணவர் காயம்; பெண் போராட்டம்

சாலை அபிவிருத்தி பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்திற்கு அருகில் பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்படாததால் தனது கணவர் கடுமையாக காயமடைந்ததாக குற்றம்சாட்டி பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இரவு நேரத்தில் தம்பதியினர் பயணம் செய்துகொண்டிருந்த போது, பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத சாலை தோண்டல் பள்ளத்தில் தனது கணவர் விழுந்ததாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

சம்பவத்துக்கு மறுநாள் காலை அந்த இடத்தில் போராட்டம் நடத்திய அவர்,

விபத்து நடந்த நேரத்தில் எந்தவொரு பாதுகாப்பு தடுப்புகளும் அல்லது எச்சரிக்கை பலகைகளும் இருக்கவில்லை.

விபத்துக்குப் பின்னரே அவை அமைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

மூன்று பிள்ளைகளின் தாயான அவர், தனது கணவரின் உயிரைக் காப்பாற்றவும், நீதியை வழங்கவும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“ஒரு எச்சரிக்கை பலகை இருந்திருந்தால்கூட இந்த விபத்தைத் தவிர்த்திருக்க முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore