கொட்டகலை, ஸ்டோனிக்ளிப் தோட்டப் பகுதியில் கம்பி கண்ணியில் சிக்கியிருந்த சிறுத்தை ஒன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தற்போது ரந்தெனிகல வனவிலங்கு அலுவலகத்தில் சிகிச்சை பெற்று வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளமான X-இல் வெளியிட்ட பதிவில், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட:
கால்நடை வைத்தியர்கள் டாக்டர் கங்கா மற்றும் டாக்டர் நிஹால்,
அகலங்க மற்றும் அவரது குழுவினர்,
ஹர்ஷ மதுரங்க, சஷிகா,
வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள்
ஆகியோருக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பவம் குறித்து தகவல் வழங்கிய நுவன் மற்றும் பண்டார ஆகியோருக்கும் நன்றி தெரிவித்த அவர், இரவு முழுவதும் இடம்பெற்ற மீட்பு நடவடிக்கையை தானும் ஒருங்கிணைத்ததாக கூறியுள்ளார்.
தற்போது தொழிற்சங்க நடவடிக்கைகள் நிலவிய போதிலும், அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு சிறுத்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.
அத்துடன், கால்நடை வைத்தியர்களின் அர்ப்பணிப்பான சேவைக்கு உரிய அங்கீகாரமும் பாராட்டும் வழங்கப்பட வேண்டிய நேரம் இது என்றும் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.





