வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் பதவி விலகத் தீர்மானம்

வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் (Karoline Leavitt) இம்மாத இறுதியில் தனது பதவியிலிருந்து விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவதற்காகவே அவர் இந்தப் பதவியிலிருந்து விலகுவதாகவும், அந்த முடிவை முழுமையாகப் புரிந்துகொண்டு மதிப்பளிப்பதாகவும் ஜனாதிபதி தனது சமூக ஊடகப் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், கரோலின் எதிர்காலத்தில் தனது முக்கிய வெளிப்புற ஆலோசகராகவும், குடியரசுக் கட்சிக்குள் ஒரு பலமிக்கக் குரலாகவும் செயல்படுவார் எனத் தெரிவித்துள்ளார்.

28 வயதான லெவிட், வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளராகப் பொறுப்பேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்குப் பதிலாக யார் நியமிக்கப்படுவார்கள் என்பது இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.

குடும்ப விவகாரங்கள் மற்றும் தாய்மைக்காகவே இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்துள்ள லெவிட், இந்தப் பணி தனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் மற்றும் ஒரு சிறந்த அனுபவம் என தனது ‘X’ சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு சிறு குழந்தைகளைப் பராமரித்துக் கொண்டே, உலகின் மிகவும் சவாலான ஒரு பணியில் ஈடுபடுவது தான் எதிர்கொண்ட மிகவும் கடினமான அனுபவமாக இருந்தது என்றும், இப்பதவிக்குத் தேவையான நேரத்தையும் உழைப்பையும் வழங்கி ஒரு சிறந்த தாயாக இருக்க முடியாது என்பதால் வெள்ளை மாளிகையிலிருந்து விடைபெற முடிவு செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முதல்முறையாக ஜனாதிபதி ட்ரம்ப்பின் பதவிக் காலத்தில் உதவி ஊடகச் செயலாளராகப் பணியாற்றிய அவர், அதைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் எலிஸ் ஸ்டெபானிக் (Elise Stefanik) கீழ் தொடர்பாடல் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

2024 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஊடகச் செயலாளராகப் பணியாற்றிய அவர், தனது பதவிக் காலத்தில் ஊடகங்களுடன் தீவிரமாக உரையாடும் கொள்கையைப் பின்பற்றிய ஒரு அதிகாரியாகப் புகழ்பெற்றிருந்தார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore