ஜப்பானில் இலங்கை மாணவர் கைது – சக இலங்கை மாணவர் கத்திக்குத்தில் உயிரிழப்பு

ஜப்பானின் Nagareyama நகரில், 21 வயதான இலங்கை மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 18 வயதான இலங்கை மாணவர் ஒருவர் கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருவரும் ஒரே குடியிருப்பில் வசித்து வந்த சர்வதேச மாணவர்கள் என ஜப்பானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை காலை சுமார் 10.20 மணியளவில், இருவரும் வசித்து வந்த வீட்டிற்குள் இடம்பெற்ற மோதலின்போது, 18 வயதான சந்தேகநபர் 21 வயதான தனது சக மாணவரின் வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த மாணவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தையடுத்து, சந்தேகநபரே அவசர சேவை இலக்கமான 119-க்கு அழைத்து தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்திலேயே பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தியபோது, தனது அறிமுகமானவரை கத்தியால் குத்தியதை அவர் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரிடம் சந்தேகநபர் வழங்கிய ஆரம்ப வாக்குமூலத்தின்படி, தன்னை அவமதிக்கும் வகையில் அழைத்தமை, தனது தாயை அவமதித்தமை மற்றும் தன்னை தாக்கியமை காரணமாக ஆத்திரமடைந்து கத்தியால் குத்தியதாக தெரிவித்துள்ளார்.

இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என உறுதிப்படுத்தியுள்ள ஜப்பானிய பொலிஸார், சம்பவத்திற்கான முழுமையான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore