கட்டுநாயக்க விமான நிலையத்தில் 44,000 சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இந்திய பிரஜை கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 44,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 35 வயதுடைய இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் கட்டுநாயக்க விமான நிலைய உப பிரிவின் அதிகாரிகளால் நேற்று (13) இரவு இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிடைத்த தகவலின் அடிப்படையில் விமான நிலையத்தின் வருகை முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, சந்தேகநபர் 220 சிகரெட் கார்ட்டன்களில் அடைக்கப்பட்டிருந்த 44,000 வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து 35 வயதுடைய இந்திய பிரஜை கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவு முன்னெடுத்து வருகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore