பத்தரமுல்லை பிரபல ஹோட்டலுக்குள் புகுந்த முதலை – சமூக வலைத்தளங்களில் காணொளி வைரல்

கொழும்பு பத்தரமுல்லை பகுதியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றுக்குள் முதலை ஒன்று புகுந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

ஏரியை அண்மித்துள்ள குறித்த ஹோட்டலின் விருந்துபசார மண்டபத்திற்குள் முதலை புகுந்துள்ளதாக காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஹோட்டல் ஊழியர்கள் பாதுகாப்பாக முதலைக்கு வழிகாட்டி, தோட்டம் மற்றும் ஏரிக்கு செல்லும் கதவு வழியாக அதனை வெளியேற்றியுள்ளனர்.

இந்த சம்பவத்தின்போது எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore