தமிழக முதல்வர் விஜய், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் மீன்பிடிப் படகை மீட்டுத் தரவும் நடவடிக்கை எடுக்குமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ள தமிழக முதல்வர், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களின் விடுதலையை உறுதி செய்வதற்கும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள மீன்பிடிப் படகை மீட்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளார்.


இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில், அவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.





