அங்குலான கடற்பரப்பில் கடற்படை டோரா படகில் விபத்து – 11 பேர் மீட்பு; ஒருவர் மாயம்

அங்குலான கடற்பரப்பில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான டோரா ரகக் கப்பல் (Dvorа vessel) ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, கப்பலில் இருந்தவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்போது கப்பலில் இருந்த 11 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன நபரைத் தேடும் நடவடிக்கையில் இலங்கை விமானப்படையும் இணைந்துள்ளது.

விமானப்படையின் தகவலின்படி, கடற்பரப்பில் கண்காணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக Mi-17 ரக ஹெலிகொப்டர் மற்றும் Bell 412 ரக ஹெலிகொப்டர் ஆகிய இரண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

காணாமல் போன நபரைத் தேடும் மீட்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore