உண்டியல் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்ட 19 வயது இளைஞன் கைது

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின்கீழ் 19 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் (உண்டியல் முறையில்) பணப் பரிவர்த்தனை செய்யும் நபர் ஒருவர் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (18) மாலை வேல்லவீதி பொலிஸ் பிரிவில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 10,467,000 ரூபாயைச் சம்பாதித்தமை தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறியமை காரணமாக பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழும், போலி 1000 ரூபாய் பணத்தாளொன்றுடனும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொழும்பு 05 பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞராவார்.

கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore