எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தலைமையில் தமிழ், முஸ்லிம் எம்.பிக்களுடன் கலந்துரையாடல்

எதிர்க்கட்சித் தலைவர் Sajith Premadasa, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று நாடாளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் சமூக, பொருளாதார, அபிவிருத்தி மற்றும் பிராந்திய ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, இப்பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் மேலும் வலுவாக முன்வைத்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் எம்.பிக்கள் கலந்துரையாடியுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் M.L.M. ஹிஸ்புல்லாஹ், ரவூப் ஹக்கீம், இராமநாதன் அர்ச்சுனா, காதர் மஸ்தான், சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் மனோ கணேசன் உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore