இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் இலங்கை உயர்ஸ்தானிகர் உரை

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹிஷினி கொலொன்ன, இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் 66ஆவது பாடநெறியில் கலந்துகொண்டு இலங்கை–இந்தியா இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலை, சவால்கள் மற்றும் எதிர்காலம் தொடர்பில் உரையாற்றியுள்ளார்.

“India-Sri Lanka Bilateral Relations: Determinants, Status, Opportunities, Challenges and the Way Forward” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த உரையில், இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, இணைப்பு, எரிசக்தி, பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் மக்கள் தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் இந்தியாவைச் சேர்ந்த 122 சிரேஷ்ட அதிகாரிகளும், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 41 அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான சமீபத்திய உயர்மட்ட சந்திப்புகளையும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் 2024 டிசம்பர் இந்திய விஜயம் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 2025 ஏப்ரல் இலங்கை விஜயம் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டன.

மேலும், 2022ஆம் ஆண்டு இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய ஆதரவையும் அவர் நினைவுகூர்ந்தார்.

பாதுகாப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், இலங்கையின் பிரதேசம் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு அச்சுறுத்தலாக பயன்படுத்தப்படாது என்ற இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதுடன், இலங்கையின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் மூலோபாய சுயாதீனத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக பரஸ்பர நம்பிக்கையை வளர்த்தல், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், இணைப்பை விரைவுபடுத்துதல், ஒருங்கிணைந்த கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல், மக்களில் முதலீடு செய்தல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் ஆகிய ஆறு முன்னுரிமைகளையும் அவர் முன்வைத்தார்.

உரையைத் தொடர்ந்து கேள்வி–பதில் நிகழ்வும் நடைபெற்றது. மேலும், ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 2 வரை இலங்கைக்கு கல்விச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரி அதிகாரிகள் குழுவினரையும் உயர்ஸ்தானிகர் சந்தித்துள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore