இலங்கையில் விலங்குகள் தொடர்பான சட்டத்தின் வரையறையை விரிவுபடுத்தும் “விலங்குகள் (திருத்தம்) சட்டம், இலக்கம் 19 of 2026” அமுலுக்கு வந்துள்ளது.
பாராளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இந்த சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கியதைத் தொடர்ந்து இது சட்டமாகியுள்ளது.
1958ஆம் ஆண்டின் விலங்குகள் சட்டம் இலக்கம் 29 இல் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் திருத்தத்தின் மூலம், ஆடுகள், பன்றிகள் மற்றும் செம்மறியாடுகள் சட்டத்தின் இரண்டாம் பகுதிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
மேலும், நான்காம் பகுதியில் இடம்பெறும் வரையறைகளில் செம்மறியாடுகள், ஆடுகள், பன்றிகள் மற்றும் கோழிகள் உள்ளிட்டவை தெளிவாக உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த திருத்த மசோதா கடந்த ஜூலை 21ஆம் திகதி முதலாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், ஆகஸ்ட் 6ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதேவேளை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (திருத்தம்) சட்டம் இலக்கம் 20 of 2026 க்கும் சபாநாயகர் அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
இதன் மூலம் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவம் தொடர்பான தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
(Newswire)





