வவுனியா புரசங்குளம் பகுதியில் வேகமாகப் பரவிய காட்டுத்தீ, இலங்கை விமானப்படையினரின் துரித நடவடிக்கையால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தீ அருகிலுள்ள வனப் பாதுகாப்புப் பகுதி மற்றும் வவுனியா பல்கலைக்கழக வளாகம் நோக்கிப் பரவுவதைத் தடுக்கும் வகையில் விமானப்படையின் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
புரசங்குளம் பொலிஸ் நிலையத்திலிருந்து கிடைத்த தகவலையடுத்து, விமானப்படைக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
விமானப்படையினரின் விரைவான தலையீட்டினால், அருகிலிருந்த வனப் பகுதி மற்றும் பல்கலைக்கழக வளாகத்திற்கு ஏற்படக்கூடிய பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Newswire





