இரண்டாவது டெஸ்ட்: நாணய சுழற்சியில் வென்ற இந்தியா – முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இன்று (23) ஆரம்பமாகும் இலங்கை – இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியும், தனஞ்சய டி சில்வா தலைமையிலான இலங்கை அணியும் இப்போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்திய அணி: கே.எல். ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சுப்மன் கில் (அணித்தலைவர்), ரிஷப் பண்ட், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, சரண்ஷ் ஜெயின், மானவ் சுதர், மொஹமட் சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

இலங்கை அணி: லஹிரு உதார, கமில் மிஷார, பசிந்து சூரியபண்டார, கமிந்து மெந்திஸ், தனஞ்சய டி சில்வா (அணித்தலைவர்), சோனல் தினுஷ, நிரோஷன் திக்வெல்ல, கேஷர நுவந்த, பிரபாத் ஜெயசூர்ய, லஹிரு குமார, அசித பெர்னாண்டோ.

முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றிருந்த நிலையில், தொடரை சமநிலைப்படுத்தும் எதிர்பார்ப்புடன் இலங்கை அணியும், தொடரை கைப்பற்றும் நோக்கில் இந்திய அணியும் இன்றைய போட்டியில் களமிறங்குகின்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore