உலகப் புகழ்பெற்ற இசைக்கலைஞர் டோலி பார்ட்டன் காலமானார்

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியருமான டோலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80வது வயதில் காலமானார்.

அவரது குடும்பத்தினர், டோலி பார்ட்டனின் சமூக வலைத்தளப் பக்கங்கள் ஊடாக இந்தத் தகவலை அறிவித்துள்ளனர். அவரது சகோதரியின் மகனான பிரையன் சீவர் (Bryan Seaver) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கிட்டத்தட்ட ஏழு தசாப்தங்களாக இசைத்துறையில் பயணித்த டோலி பார்ட்டன், 10 கிராமி விருதுகளை வென்றதுடன், உலகளவில் 100 மில்லியனுக்கும் அதிகமான இசைத்தட்டுகளை விற்பனை செய்துள்ளார்.

“Jolene”, “I Will Always Love You”, “9 to 5” உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற பாடல்களை உருவாக்கிய சிறந்த பாடலாசிரியராகவும் அவர் திகழ்ந்தார்.

இசைத்துறைக்கு அப்பால் நடிப்பு, வணிகம் மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளிலும் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். குறிப்பாக, அவர் ஆரம்பித்த Imagination Library திட்டத்தின் ஊடாக உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

டோலி பார்ட்டன் குறுகிய காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்ததாக அவரது பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

“கன்ட்ரி இசையின் ராணி” என உலகளவில் அழைக்கப்பட்ட டோலி பார்ட்டனின் மறைவு இசைத்துறைக்கு மிகப்பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore