நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு – 94,805 பேர் பாதிப்பு

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 94,805 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு காய்ச்சலால் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம்: 9,469 பேர்
ஜூலை மாதம்: 29,962 பேர்
ஜூன் மாதம்: 21,533 பேர்

மாகாண ரீதியாக அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். அங்கு இதுவரை 50,167 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட ரீதியில்,
🔹 கம்பஹா – 20,207
🔹 கொழும்பு – 18,794
🔹 கண்டி – 6,913
🔹 களுத்துறை – 6,117
🔹 காலி – 6,111

என்ற அடிப்படையில் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடளாவிய ரீதியில் 76 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் டெங்கு அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

⚠️ வீட்டைச் சுற்றியுள்ள தேங்கிய நீர் மற்றும் கொசுக்கள் பெருகக்கூடிய இடங்களை அகற்றி, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் அனைவரும் ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore