பமுனுகம கடல் அனர்த்தம்: பெண் உள்ளிட்ட மூவரின் சடலங்கள் மீட்பு – சிறுவனைத் தேடும் பணி தொடர்கிறது

பமுனுகம, எபாமுல்ல கடற்கரையில் நேற்று (30) மாலை நீராடச் சென்ற நிலையில் காணாமல் போன பெண் மற்றும் இரு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடலில் நீராடிக் கொண்டிருந்த குழுவில் 35 வயதுடைய பெண், 4 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகள் மற்றும் 13 வயதுடைய சிறுவன் ஆகியோர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.

இந்நிலையில், பெண் மற்றும் இரு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், 13 வயதுடைய சிறுவனைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore