ஐஓசி மற்றும் சினோபெக் நிறுவனங்களும் பெற்றோல் விலையை குறைத்தன!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் பெற்றோல் விலைகளைக் குறைத்ததைத் தொடர்ந்து, லங்கா ஐ.ஓ.சி (LIOC) மற்றும் சினோபெக் (Sinopec) நிறுவனங்களும் தங்களது பெற்றோல் விலைகளை குறைத்துள்ளன.

இதன்படி, இரு நிறுவனங்களும் ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை ரூ.15ஆல் குறைத்து ரூ.399 ஆக நிர்ணயித்துள்ளன.

அதேவேளை, ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை ரூ.20ஆல் குறைக்கப்பட்டு ரூ.475 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விலைகள் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore