நேபாள வெள்ளத்தில் காணாமல் போனோர் எண்ணிக்கை 4,247 ஆக உயர்வு; உயிரிழப்பு 900-ஐ கடந்தது!

நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவைத் தொடர்ந்து காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 4,247 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை குறைந்தது 903 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை 2,502 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

காணாமல் போனவர்களில் 3,655 பேர் நேபாள பிரஜைகள் என்பதுடன், மேலும் 592 வெளிநாட்டவர்களும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீனாவின் திபெத் பகுதியில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 546 பேர் காணாமல் போயுள்ளதாக சீன அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காணாமல் போனவர்களில் நூற்றுக்கணக்கானோர் நேபாளத்தின் நீர்மின் நிலையங்களில் பணியாற்றிய ஊழியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் சிலர் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டபோது சுரங்கப் பாதைகளுக்குள் பணியாற்றிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

நேபாளத்தின் Dhunche உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நிலைமை தொடர்பில் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திலும் கவலையிலும் உள்ளதாகவும், பல குடும்பங்கள் தங்களது உறவினர்களைத் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore