பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு அவரது சட்டத்தரணி இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அர்ச்சுனா எம்.பி. சார்பில் ஆஜரான சட்டத்தரணி சேனானி தயாரத்ன இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்தக் கோரிக்கை தொடர்பில் பொருத்தமான சந்தர்ப்பத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.





