22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது.
இந்த மனுக்கள் இன்று (01) காலை 10.00 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ளன.
22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் கடந்த 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
அதன்படி, மனுக்களை விசாரிப்பதற்காக பிரதம நீதியரசரால் ஐவர் கொண்ட நீதிபதிகள் அமர்வு நேற்று அறிவிக்கப்பட்டது.
பிரதம நீதியரசருக்கு மேலதிகமாக அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய நீதிபதிகள் இந்த அமர்வில் இடம்பெற்றுள்ளனர்.





