அண்மையில் அக்கரைப்பற்று மாநகர சபை கல்லாஜ் மண்டபத்தில் நடைபெற்ற Tamil Letter ஊடக நிறுவனத்தின் 10வது ஆண்டு நிறைவு விழாவில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ மு.பிரதி தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான பாறூக் நஜி அவர்களுக்கு “அட்டாளைச்சேனை பிரதேசத்தின் அனர்த்தகால நாயகன் – 2026” என்ற கௌரவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கடந்த டித்வா அனர்த்த காலப்பகுதியில், அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஒலுவில் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை இரவு பகலாக நேரடியாக அறிந்து கொண்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகள், நிவாரணங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை ஒருங்கிணைப்பதில் பாறூக் நஜி அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நேரத்தில் நேரடியாகக் களத்தில் நின்று உதவியதுடன், அவர்களின் அடிப்படைத் தேவைகளை உரிய தரப்பினரிடம் கொண்டு சென்று தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் அவர் மேற்கொண்ட பங்களிப்பு, மக்கள் மத்தியில் அவருக்கான நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் மேலும் வலுப்படுத்தியது.
அவரது இந்த மனிதநேயப் பணியையும், அர்ப்பணிப்பான சமூக சேவையையும், அனர்த்தகால களப்பணியையும் பாராட்டும் வகையில் Tamil Letter ஊடக நிறுவனத்தினால் இவ்விருது வழங்கப்பட்டது.
இவ்விருதினை தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சரும், அக்கரைப்பற்று மாநகர முதல்வருமான கௌரவ ALM. அதாஉல்லா சேர் அவர்கள் தனது கரங்களால் பாறூக் நஜி அவர்களுக்கு வழங்கி கௌரவித்தார்.
“அனர்த்த காலத்தில் மக்களுடன் நிற்பதே உண்மையான மக்கள் சேவை.”
இந்த விருது, மக்களுக்கான அர்ப்பணிப்புடன் தொடரும் அவரது சமூகப் பயணத்திற்கு கிடைத்த ஒரு முக்கியமான அங்கீகாரமாகும்





