கமிந்து மெண்டிஸின் துணைக் கேப்டன் பதவி பறிப்பு – மீண்டும் சரித் அசலங்காவிடம் ஒப்படைப்பு!

இலங்கை ஒருநாள் மற்றும் T20 அணிகளின் துணைக் கேப்டன் பதவியிலிருந்து கமிந்து மெண்டிஸ் நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20 தொடர்களுக்காக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ள அணியில், முன்னாள் வெள்ளைப் பந்து அணித் தலைவர் சரித் அசலங்கா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, குசல் மெண்டிஸ் இரு வடிவங்களிலும் அணித் தலைவராக தொடர்கிறார்.

கடந்த மே மாதம் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, கமிந்து மெண்டிஸ் இலங்கையின் அனைத்து வடிவங்களுக்குமான துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.

எனினும், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் மற்றும் T20 அணிகளின் துணைக் கேப்டன் பொறுப்பு தற்போது சரித் அசலங்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கமிந்து மெண்டிஸ் ஒருநாள் மற்றும் T20 அணிகளில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளார்.

கமிந்து மெண்டிஸை துணைக் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி தலா 3 T20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இலங்கை அணி எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் திகதி இங்கிலாந்து நோக்கிப் புறப்படவுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore