ஆசிய மகளிர் T20 கிரிக்கெட் தொடரில் இந்தோனேசிய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 124 ஓட்டங்களை பெற்றது.
வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தோனேசிய அணி, 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 49 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
இலங்கை அணியின் தலைவி சமரி அத்தபத்து பந்துவீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 3.3 ஓவர்களில் வெறும் 5 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் ஹெட்ரிக் விக்கெட்டும் அடங்குகிறது.
இது T20 சர்வதேச கிரிக்கெட்டில் சமரி அத்தபத்தின் சிறந்த பந்துவீச்சு பெறுபேறாக பதிவாகியுள்ளது.
மேலும், ICC முழு உறுப்பினர் அணியைச் சேர்ந்த வீராங்கனை ஒருவரின் T20 சர்வதேச பந்துவீச்சில் இதுவரை பதிவான சிறந்த பெறுபேறாகவும் இது அமைந்துள்ளது.





