கொழும்பு மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமித்புர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (02) மாலை இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த பெண்ணிடமிருந்து சுமார் 1,000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.





