கொழும்பு, டெமட்டகொட வெலுவன வீதி பகுதியில் இன்று (03) பொலிஸாரின் உத்தரவை மீறி சென்ற முச்சக்கர வண்டியை நோக்கி பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
கம்பனி வீதியிலிருந்து வந்த குறித்த முச்சக்கர வண்டி முறையற்ற மற்றும் ஆபத்தான முறையில் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய போதிலும், சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியில் பயணித்த 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து 3 வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் கொலன்னாவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





