அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (03) சில முன்னணி வர்த்தக வங்கிகளில் மேலும் சற்று குறைந்துள்ளது.
எனினும், டொலரின் விற்பனை விகிதம் பெரும்பாலான வங்கிகளில் ரூ.332 முதல் ரூ.333 வரையான மட்டத்திலேயே காணப்படுகிறது.
இன்றைய நிலவரப்படி,
🔹 Seylan Bank – கொள்வனவு ரூ.323.90 | விற்பனை ரூ.333.15
🔹 NDB Bank – கொள்வனவு ரூ.323.60 | விற்பனை ரூ.332.60
🔹 People’s Bank – கொள்வனவு ரூ.324.20 | விற்பனை ரூ.332.24
🔹 Commercial Bank – கொள்வனவு ரூ.322.35 | விற்பனை ரூ.332.25
🔹 Sampath Bank – கொள்வனவு ரூ.324.50 | விற்பனை ரூ.332.50
நேற்றைய விகிதங்களுடன் ஒப்பிடுகையில், NDB, People’s Bank, Commercial Bank மற்றும் Sampath Bank ஆகியவற்றில் டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விகிதங்களில் சிறிய அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இதில் Sampath Bank-இல் டொலரின் கொள்வனவு விகிதம் ரூ.324.00 இலிருந்து ரூ.324.50 ஆகவும், விற்பனை விகிதம் ரூ.332.00 இலிருந்து ரூ.332.50 ஆகவும் உயர்ந்துள்ளது.
குறிப்பு: வங்கிகளின் நாணய மாற்று விகிதங்கள் நாளின் போது மாறக்கூடும்.





