இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சமீபத்தில் குறைந்துள்ள போதிலும், நோய் பரவும் அபாயம் இன்னும் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
2026ஆம் ஆண்டில் இதுவரை 95,868 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு காரணமாக 72 மரணங்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதிகமான நோயாளர்கள் பதிவான மாவட்டங்களில் கம்பஹா, கொழும்பு, கண்டி மற்றும் களுத்துறை ஆகியவை முன்னிலையில் உள்ளன.
நுளம்புகளின் பெருக்கம் அதிகரிக்கும் பகுதிகளில் பின்னர் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, டெங்கு குறைந்துவிட்டதாக நினைத்து அலட்சியம் செய்ய வேண்டாம்.
வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் தேங்கி நிற்கும் நீரை அகற்றுங்கள்.
நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை தவறாமல் பரிசோதியுங்கள்.
பணியிடங்களிலும் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருங்கள்.
டெங்குவைத் தடுப்பது அனைவரின் பொறுப்பு!





