பெண்ணொருவரின் தனிப்பட்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் அனுமதியின்றி பகிர்ந்ததாகக் கூறப்படும் 36 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த நபர் நேற்று (03) கினிகத்தேனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர் கினிகத்தேனை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், முறைப்பாட்டாளருடன் முன்னர் திருமண உறவில் இருந்து பின்னர் சட்டபூர்வமாகப் பிரிந்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கண்டி உப பிரிவு முன்னெடுத்து வருகிறது.
⚠️ தனிப்பட்ட புகைப்படங்கள் அல்லது தகவல்களை ஒருவரின் அனுமதியின்றி சமூக ஊடகங்களில் பகிர்வது சட்டரீதியான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம்.





