இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டிருந்த 9 இந்திய மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 22ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட அவர்கள், நேற்று (03) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தண்டனைகள் மற்றும் அபராதங்களை விதித்ததுடன், பின்னர் குறித்த மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, நீதிமன்ற உத்தரவுக்கமைய 9 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
📌 இந்திய மீனவர்கள் தொடர்பான கடற்பரப்பு அத்துமீறல் விவகாரம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.





