கிளிநொச்சி, உருத்திரபுரம் D7 பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உருத்திரபுரம் இந்துக் கல்லூரிக்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த பனை மரத்துடன் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கிளிநொச்சி உதயநகர் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






