கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கொழும்பு இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் இருந்தே அவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்காக சர்ச்சைக்குரிய விமானங்களை கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ஷ இன்று (04) முற்பகல் இலஞ்ச ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தார்.
அங்கு சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர், அவர் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
🔴 நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.





