இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக இன்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ மண்டபத்திற்கான நாற்காலிகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தில், தகுதியான முறையில் தெரிவுசெய்யப்பட்ட நிறுவனத்தை நீக்கிவிட்டு, தனக்கு நெருக்கமான ஒருவருக்கு அந்த ஒப்பந்தத்தை வழங்கியதாகவும், இதன்மூலம் அரசுக்கு ரூ.79 இலட்சம் நட்டம் ஏற்பட்டதாகவும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
⚠️ குறித்தவை விசாரணை அமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளாகும். நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும் வரை குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கருத முடியாது.





