UPDATE: நாமல் ராஜபக்ஷ செப்டம்பர் 18 வரை விளக்கமறியலில்!

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கான Wide-body விமானங்களை கொள்வனவு செய்தமை தொடர்பான சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்ச சம்பவம் தொடர்பிலான விசாரணையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இன்று (04) இலஞ்ச ஆணைக்குழுவில் ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

⚖️ நீதிமன்ற உத்தரவு: செப்டம்பர் 18 வரை விளக்கமறியல்.

⚠️ குறித்தவை விசாரணை அமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளாகும். வழக்கு தொடர்பான இறுதி தீர்ப்பு நீதிமன்றத்தினால் வழங்கப்படவில்லை.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore