பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ‘குடு சளிந்து’வுக்கு எதிரான இரண்டு வழக்குகளின் கோப்புகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
📌 இந்த வழக்குக் கோப்புகள் காணாமல் போனமை தொடர்பில் நீதிமன்றப் பதிவாளர் கடந்த செப்டம்பர் 1ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
📌 இதனையடுத்து, குறித்த நீதிமன்றத்தில் பிஸ்கல் மற்றும் அழைப்பாணைகளுக்குப் பொறுப்பாக கடமையாற்றிய அதிகாரி செப்டம்பர் 2ஆம் திகதி தாய்லாந்துக்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
📂 காணாமல் போனதாகக் கூறப்படும் கோப்புகளில்:
- பாணந்துறை வடக்கு பகுதியில் இடம்பெற்ற மனிதக் கொலை தொடர்பான வழக்கு
- பணச்சலவைச் சட்டத்தின் கீழ் CIDயினால் தொடரப்பட்ட வழக்கு
என்பன அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔎 சம்பவம் தொடர்பில் இதுவரை 10 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 7 பேர் பெண் ஊழியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது





