சைபர் குற்றங்கள், சட்டவிரோத இணையவழி சூதாட்டம் மற்றும் இணைய மோசடிகளை கட்டுப்படுத்தும் வகையில் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இணையதளங்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவை ஆலோசனைக் குழு, அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோது இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
🔹 சைபர் குற்றங்களில் ஈடுபடும் வெளிநாட்டினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
🔹 அவர்களை தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து நாட்டிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை
🔹 சைபர் குற்ற விசாரணைகளுக்காக மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் சட்டத்தரணிகளை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை
🔹 புதிய தொழில்நுட்ப அமைப்புகளை அறிமுகப்படுத்த திட்டம்
🔹 சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளை விசாரிக்க மத்திய அமைப்பொன்றை உருவாக்குவது குறித்து கவனம்
🔹 கிரிப்டோகரன்சி தொடர்பான குற்றங்கள் குறித்து சர்வதேச தரவுப் பகிர்வை மேம்படுத்த நடவடிக்கை
🔹 பொலிஸ் விசாரணைகளை விரைவுபடுத்தவும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் வலியுறுத்தல்
📌 சட்டவிரோத இணைய நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





